அணு ஆயுத கப்பல் ஏவுகணை ஏவிய வடகொரியா: கொரிய கடல் பகுதியில் நீடிக்கும் பதற்றம்
வட கொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை ஏவி சோதனையிட்டுள்ளது.
மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை புதிய சோதனை முயற்சியாக கிழக்கு கடற்கரையில் இருந்து பல கப்பல் ஏவுகணைகளை ஏவி உள்ளது.
அணுசக்தியை தாங்கி செல்லக்கூடிய புதிய தந்திரோபாய கப்பல் ஏவுகணை என அழைக்கப்படும் Pulhwasal-3-31 ஏவுகணையை ஏவி சோதனையிட்ட சில தினங்களுக்கு பிறகு இந்த புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது இந்த வாரத்தின் இரண்டாவது ஏவுகணை சோதனை என தென் கொரிய ஒருங்கிணைந்த படையின்(JCS) தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணையின் எண்ணிக்கைகளை குறிப்பிடாமல் சோதனையானது காலை 8 மணிக்கு நடத்தப்பட்டு இருப்பதாக தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் கணித்து இருப்பதாக JCS தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய கப்பல் ஏவுகணைகளை வடகொரியா கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் தொடர்ச்சியாக சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.