விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: நண்பர்கள் கூறும் காரணம்
பிரித்தானிய பிரதமர் திங்கட்கிழமைகளில் சாப்பிடமாட்டார் என ரிஷி சுனக்கின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார் என்றும், செவ்வாய்க்கிழமை காலை 5 மணி வரை உணவு உண்ண மாட்டார்.
இந்த நேரத்தில் அவர் கருப்பு காபி மற்றும் தண்ணீரை மட்டுமே குடிப்பார். ரிஷி சுனக் பல ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்.
36 மணி நேரம் கடும் விரதம்
ரிஷி சுனக் புகை பழக்கம் இல்லாதவர்.என குறித்த நண்பர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் அவரது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் உதவுகிறது.
ஆகவே, அவ்வப்போது அவர் விரதம் இருப்பது உண்டு எனவும் தெரிவித்தனர்.
ரிஷி சுனக்
2022 இல்,ஒரு நேர்காணலில்”நான் இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன், அதனால் பெரும்பாலான நாட்களில் என்னிடம் காலை உணவு எதுவும் இல்லை.” என ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்படி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ரிஷி, சட்டையில்லாமல் இப்படித்தான் இருப்பார் என கணித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.