கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்
பாகிஸ்தானின் கடற்படைக் கப்பலான சைஃப் ( SAIF ) கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (30.01.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.
சைஃப் கடற்படைக் கப்பலானது 123 மீற்றர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும்.
கொழும்பு கடற்பகுதியில் பயிற்சி
இந்த போர்க்கப்பல் கேப்டன் முஹம்மது அலியின் தலைமையில் 276 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதாக கடற்படை ஊடகப்பிரிவு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என கூறப்படுகிறது.
அத்தோடு இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தானின் சைஃப் கப்பலானது எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கையை விட்டு வெளியேறி, இலங்கை கடற்படையின் கப்பலுடன் கொழும்பு கடற்பகுதியில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.