கேஸ் சிலிண்டர் விலை இவ்வளவு குறைப்பா? வெளியான முக்கிய தகவல்!
கேஸ் சிலிண்டர் விலை ரூ.300 வரை குறையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேஸ் சிலிண்டர்
மத்திய அரசு கேஸ் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைந்து எரிவாயு நுகர்வோருக்கு சிலிண்டர்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. கடந்த 2, 3 ஆண்டுகளாக, கேஸ் விலை அதிகரித்து, மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் அரசு எரிவாயு விலையில் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மானியம் ரூ.300 வரை இருக்கலாம் என்று தெரிகிறது.
விலை குறைவு?
அவ்வாறு வழங்கினால் மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.660க்கு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என தெரிய வருகிறது. தற்போது, எல்பிஜி நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 33 கோடியாக உள்ளது.
இதனால், 2025-26 ஆம் ஆண்டுக்குள் மேலும் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மானிய சிலிண்டர்கள் குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது