புதிய டென்னிஸ் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புதிய டென்னிஸ் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் 11.05 மணியளவில் அம்பாறை செனரத் சோமரத்ன டென்னிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு ஆளுநர் திரு.செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், அம்பாறை மாநகர உதவி ஆணையாளர் கமல் நெத்மினி மற்றும் அதிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் இல்லை, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு.தமயந்த விஜய அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்டு 22.01.2023 அன்று திறந்து வைக்கப்பட்ட அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலை டென்னிஸ் மைதானத்தில் திறமையான பல பாடசாலைகள் உட்பட பல திறமையான டென்னிஸ் வீரர்கள் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் வீரர்கள் பலர் பிறந்துள்ளனர்.
அத்துடன் பாடசாலைகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டி கடந்த 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், இதன்போது பாடசாலைகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலையாக அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையும் சிறந்த பாடசாலை டென்னிஸ் வீராங்கனையாக டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையின் யூ.எச்.ஜெனுர நதீஷாவும் வெற்றிக்கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.