;
Athirady Tamil News

அரசு ஊழியர்களுக்கு செலவுக்கு ஏற்ற சம்பளம் இல்லை: எதிரணி குற்றச்சாட்டு

0

அரச ஊழியர்களே இப்போது மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், அரசாங்க ஊழியரை விட தேங்காய் பறிப்பவர் நன்றாக வாழ்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகத்தில் நிலவும் யானைப் பிரச்சினைகள், விவசாயப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

குழந்தைகளின் பாடசாலை செலவு
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், அரசு ஊழியர்களான உங்களுக்கும் எங்களுக்கும் நிஜமாகவே சந்தோஷம் இல்லை. செலவுகளைக் கருத்தில் கொண்டால் குறை சொல்ல ஒன்றுமில்லை.

மின்சாரம், தண்ணீர், எரிவாயு, கல்விக்கட்டணம், குழந்தைகளின் பாடசாலை செலவு எல்லாமே அதிகம் இந்த நேரத்தில் அரசு ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறார்கள்.

இன்று தேங்காய் பறிக்கும் ஒருவர் உங்களை விட சிறப்பாக வாழ்கிறார். அவர் செலவுக்கு இணையாக விலையை உயர்த்தியதால், தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

சம்பளம் போதுமானதாக இல்லை
மேலும், தொழிலாளி தரப்பில் இருந்து, மேசன் பாஸ் தரப்பில் இருந்து எல்லாமே அதிகரித்துவிட்டன. ஆனால், அரசு ஊழியர்களால் மட்டும் செலவுக்கு ஏற்ற சம்பளத்தை கொடுக்க முடியவில்லை.

அதனால், அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் என்பதை நான் அறிவேன். நாங்கள் வாழ்ந்த மாதிரி வாழ முடியாது, எங்கள் அரசு ஊழியர்கள் பலர் சம்பளம் வாங்கி அதனை வங்கிக் கடனுக்கு கட்டுகிறார்கள் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.