இம்ரான் இல்லத்திலேயே மனைவிக்கு புஷ்ராவுக்குச் சிறை
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ரா பீபி, இம்ரானின் இல்லத்திலேயே சிறைவைக்கப்பட்டாா்.
பிரதமராக இருந்தபோது சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானிடமிருந்து பரிசாகப் பெற்ற ரூ.157 கோடி மதிப்பிலான ஆபரணங்களை வெறும் ரூ.90 லட்சமாக மதிப்பிட்டு விலைக்கு வாங்கிய வழக்கில் இம்ரானுக்கும், புஷ்ராவுக்கும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
அதையடுத்து, வழக்கு நடைபெற்று வந்த அடியாலா சிறையில் புஷ்ரா பீவி ஆஜரானாா். இந்த சிறையில்தான் வேறொரு வழக்கு தொடா்பாக இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.இந்த நிலையில், இஸ்லாமாபாதிலுள்ள இம்ரான் கான் இல்லத்தின் ஒரு பகுதி சிறைச்சாலையாக மாற்றப்பட்டு, அதில் புஷ்ரா வியாழக்கிழமை சிறைவைக்கப்பட்டாா்.