குழந்தைகளை சீர்குலைக்கும் சமூக வலைத்தளம்: சபையில் மன்னிப்பு கோரிய பிரபல தொழிலதிபர்
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் மெட்டா நிறுவனத்தலைவர் மார்க் ஜுகர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
சமூக வலைத்தளங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பல பெற்றோர்கள் குற்றம் சுமத்தியதையடுத்து, அமெரிக்க செனட் சபை அது தொடர்பாக சமூக வலைத்தள பிரதிநிதிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது.
அப்போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் தவறான நடவடிக்கைகள் குறித்து சபையில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அனுபவித்த துன்பங்கள்
அதனையடுத்து, குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி, உங்கள் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா என மார்க்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, எழுந்து நின்ற மார்க், நீங்கள் அனைவரும் அனுபவித்த துன்பங்களுக்கு வருந்துவதாகவும் அதற்காக தன்னை மன்னிக்குமாறும் கூறியுள்ளார்.
மேலும், குறித்த விசாரணையில் டிக்டொக், ஸ்னெப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.