விலையில் மாற்றம் இல்லை ; லாப்ஸ் நிறுவனம்
இம்மாதம் உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாத விலை பெப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதெவேளை லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (02) காலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது லாப்ஸ் நிறுவனமும் விலையில் மாற்றமில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.