அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா
பிரித்தானியா அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பல் தயாராகிவருவதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
6,000 மைல்கள்
அதன்போது இந்த கப்பல், அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து Trident 2 என்னும் ஏவுகணையை ஏவ இருக்கின்றது.
ஏவப்படும் ஏவுகணையில் அணு ஆயுதங்கள் ஏதும் காணப்படாது என்றும் அது . 6,000 மைல்கள் பயணித்து பிரேசிலுக்கும் மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் நடுவே கடலில் விழுமென தெரிவிக்கப்படுகிறது
முன்கூட்டியே எச்சரிக்கை
இந்நிலையில், ஏவுகணை சோதனை தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தொடர்பிலான அமைப்புகளில் ஒன்றான The US National Geospatial Intelligence Agency என்னும் அமைப்பு, அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, 2016ஆம் ஆண்டு, இதேபோல ஒரு அணு ஆயுத சோதனையை பிரித்தானியதாகவும் அது தோல்வில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.