ஜேர்மனியில் வேலைநிறுத்த போராட்டம் : நெருக்கடியில் பொதுமக்கள்
ஜேர்மனியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 மாகாணங்களில் 130 நகராட்சி பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் அந்நாட்டிலிருக்கும் பெரும்பாலான பொது மக்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை பூர்த்தி செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய விதிமுறைகள்
போக்குவரத்து நிறுவனங்களின் புதிய விதிமுறைகளை கண்டித்தே இப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை சில தினங்களுக்கு முன் தொடருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றுமுன்தினம் விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 1,100 விமான சேவைகள் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.