மீண்டும் கரட் விலை அதிகரிக்குமா? இன்றைய மரக்கறி விலைப்பட்டியல்
நுவரெலியாவில் கரட் விலைக்கு நிகராக பீட்ரூட் விலையும் உயர்ந்துள்ளது.
அதனடிப்படையில் நுவரெலியா கரட்டின் மொத்த விற்பணை விலை 630 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் இலை வெட்டிய பீட்ரூட் கிழங்கின் விலை 630 ரூபாயாக மொத்த விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று (03.02.2024) காலை வெளியிட்டுள்ள மரக்கறிகளின் மெத்த விற்பணை விலை பட்டியலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மரக்கறிகளின் மொத்த விலை
இந்நிலையில், மரக்கறிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருத்த நிலைமை மாறுப்பட்டு தற்போது விளைச்சளுக்குள்ளான கரட் உள்ளிட்ட பல மரக்கறிகள் அருவடை செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த நான்கு தினங்களாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தைக்கு தாராாமாக மரக்கறிகள் விற்பணைக்காக வந்து கிடைப்பதாகவும் இதனால் விலை வீழ்ச்சி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினத்தில் நுவரெலியாபொருளாதார மத்திய நிலைய சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கோவா 470 ரூபாய், கரட் 630 ரூபாய்,லீக்ஸ் 450 ரூபாய்,ராபு 120 ரூபாய்,இலை வெட்டா பீட் 520 ரூபாய்,இலை வெட்டிய பீட் 630 ரூபாய்,உருளை கிழங்கு 320 ரூபாய், சிவப்பு உருளை கிழங்கு 340 ரூபாய், நோக்கல் 370/=ரூபாய் என மொத்த விற்பணை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல்நாட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் மரக்கறிகள் விலையும் ஒரளவு விலை குறைவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.