சட்டவிரோதத் திருமண வழக்கு: இம்ரான், மனைவிக்கு மேலும் 7 ஆண்டுகள்
இஸ்லாம் மதத்துக்கு விரோதமாக திருமணம் செய்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அந்த நாட்டு சிவில் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
ஏற்கெனவே, பரிசுப் பொருள் முறைகேட்டில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், புஷ்ரா பீபியின் முன்னாள் கணவா் கவாா் மனேகா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிவில் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.இது தொடா்பாக மனேகா தாக்கல் செய்திருந்த மனுவில், இஸ்லாமிய முறைப்படி ஒரு திருமணத்துக்கும், அடுத்த திருமணத்துக்கும் இடையே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய இடைவெளியை இம்ரானும், புஷ்கா் பீபியும் கடைப்பிடிக்கத் தவறியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிமன்றம், இருவருக்கும் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது.முன்னதாக, மேலும் ஒரு பரிசுப் பொருள் வழக்கில் 3 ஆண்டுகளும், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்கில் 10 ஆண்டுகளும் இம்ரானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.