;
Athirady Tamil News

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்: இது தான் காரணமா.!

0

கனடாவில் குடியேர்ந்துள்ள புலம்பெயர் நபர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் குடியேறி இருப்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக கூறப்படுகிறது.

காலப் பகுதி
அதன்போது, புலம்பெயர்வோரில் 15 வீதமானவர்கள் தங்களது தாய் நாட்டுக்கு அல்லது வேறு ஒரு நாட்டுக்கு செல்வதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், குடிப்பெயர்ந்து 20 ஆண்டு காலப் பகுதிக்குள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக புள்ளி விபரவியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம்
1982ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கனடாவிற்குள் குடியேறியவர்கள் தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குடியிருப்பு பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் கனடாவிற்குள் புலம்பெயர்ந்தவர்கள் சில ஆண்டுகளிலேயே வேறு நாடுகளுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.