பதிலடி நிச்சயம்: அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுதி
ஏமனில் ஹவுதிகளின் 36 இலக்குகளின் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடி உறுதி என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜோர்டானில் அமெரிக்க நிலைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்தே அமெரிக்கா ஈராக், சிரியா மற்றும் ஏமன் மீது தாக்குதலை நடத்தியது.
அத்துடன், இரண்டாவது நாளாகவும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து ஹவுதிகளின் 36 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
கடுமையான விளைவுகள்
குறித்த தாக்குதலில், ஹவுதிகளின் ஆயுதங்கள் சேமிப்பு கிடங்குகள், ஏவுகணை அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் செங்கடல் வழியே பயணிக்கும் கப்பல் மீது தாக்குதல் நடத்த ஹவுதிகள் பயன்படுத்திய பிற ஆயுதங்களையும் அழிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹவுதிகளின் செய்தித்தொடர்பாளர் Yahya Sarea தெரிவிக்கையில், அமெரிக்கா முன்னெடுத்துள்ள இந்த தாக்குதலானது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உறுதி என எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா தாக்குதல்
மேலும், இது மிக மோசமான தாக்குதல் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர், ஜோர்தானில் அமெரிக்க துருப்புகள் மீது ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதில் மூவர் பலியானதை தொடர்ந்து அதற்கு பதிலடியாக ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, வெள்ளிக்கிழமை சிரியா மற்றும் ஈராக்கில் சுமார் 85 இலக்குகள் மீது முதல் தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தது. இதில் சுமார் 40 பேர் வரை கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.