லண்டனில் அமில வீச்சை துணிவுடன் தடுத்த பெண்ணுக்கு இரு கண்களும் காயம்பட்டுள்ளதாக தகவல்
லண்டனில் ஆப்கான் அகதி ஒருவர் முன்னெடுத்த அமில வீச்சு தாக்குதலை துணிச்சலுடன் தடுக்க முயன்ற பெண்மணிக்கு இரு கண்களும் காயம்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் சிகிச்சை
தற்போது அவர் சிறுப்பு கண் மருத்துவரிடம் சென்று தினமும் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. தாக்குதலை முன்னெடுத்த Abdul Ezedi என்ற ஆப்கான் அகதியை சம்பவம் நடந்து நான்காவது நாளாக பொலிசார் தேடி வருகின்றனர்.
நியூகேஸில் வசிக்கும் 35 வயதான அப்துல் எஸேதி, புதன்கிழமை அதிகாலையில் தெற்கு லண்டனுக்குப் பயணித்துள்ளார், கடைசியாக அதே நாள் இரவு 9 மணிக்கு கிங்ஸ் கிராஸ் லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் காணப்பட்டார்.
அமில வீச்சின் போது தடுக்க முயன்ற 50 வயது கடந்த பெண்மணி ஒருவர் தற்போது மிக மோசமாக காயம் பட்டுள்ளார் என்றே தெரியவந்துள்ளது. தாயார் மற்றும் இரு சிறார்கள் மீது அமில வீச்சு நடத்திய எஸேதி அப்பகுதியில் இருந்து மாயமானார்.
சிறுமியை காயப்படுத்தவே
ஆனால் அந்த சிறார்களை காப்பாற்ற முயன்ற தொடர்புடைய பெண்மணி தற்போது சிறப்பு மருத்துவரிடம் தினசரி சிகிச்சை பெற்றுவருகிறார் என கூறப்படுகிறது.
உண்மையில் அந்த தாக்குதல்தாரி 3 வயது சிறுமியை காயப்படுத்தவே முயன்றுள்ளார். இந்த சம்பவங்களை நேரில் பார்த்த நிலையிலேயே அந்த நபரை தடுக்க முயன்றதாக குறித்த பெண்மணி தெரிவித்துள்ளார்.