;
Athirady Tamil News

தங்க நகை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை: மயக்கி நகைகளை திருடும் பெண்

0

அவிசாவளை, கொஸ்கம சந்தைக்கு வந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் 2 பென்டன்ட்கள் என்பன திருடப்பட்டுள்ளன.

பெண்ணை மயக்கமடைய செய்து மற்றுமொரு பெண் இந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொஸ்கம, கீழ் கொஸ்கம ஆலய வீதியில் வசிக்கும் முறைப்பாட்டாளரான பெண், இரத்த பரிசோதனைக்காக கொஸ்கமவுக்கு வந்ததாகவும், அதன் பின்னர், கொஸ்கம சந்தையில் பொருட்களை எடுக்க சென்ற போது, ​கொள்ளையடிக்கும் பெண்ணை சந்தித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்
அருகில் உள்ள பழக் கடையில் பழங்களை எடுத்துச் செல்ல வந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அப்பெண் கூறியுள்ளார்.

சந்தேக நபரான பெண்ணை சந்தித்த சிறிது நேரத்தில் தனக்கு மயக்கம் வந்ததாகவும், பழக் கடைக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்ததாகவும் தனக்கு உதவியாக அப்பெண்ணும் அமர்ந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் உடல்நிலை சரியாகி பார்க்கும் போது நகைகளையும் காணவில்லை அந்த பெண்ணையும் காணவில்லை என பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தங்க நகை
சம்பவத்தை எதிர்கொண்ட முறைப்பாட்டாளர், தன்னிடம் திருடிய பெண்ணை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும், தன்னிடம் இருந்து திருடப்பட்ட நகைகளையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் குறிப்பிட்டதாக பொலிஸர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.