தமிழர் பகுதியொன்றில் பயங்கர சம்பவம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலர்!
புதுகுடியிருப்பு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள், முச்சக்கரவணடி என்பனவற்றை மோதி தள்ளியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (05-02-2024) புதுகுடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் மோட்டார் சைக்கிள் ஒன்றை கார் முந்தி செல்ல முற்பட்ட வேளை இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, காரின் கீழ்ப்பகுதியிலிருந்து இரு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.