சார்லஸ் பதவி விலகுவார்… யாரும் எதிர்பாராத ஒருவர் மன்னராவார்: கவனம் ஈர்க்கும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் சிகிச்சை காரணமாக பதவி விலக நேர்ந்தால், பிரான்ஸின் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளது மீண்டும் உண்மையாகும் என கூறிவருகின்றனர்.
சார்லஸ் பதவி விலகுவார்
பிரான்சில் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோதிட நிபுணரான நோஸ்ட்ராடாமஸ் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு சம்பவங்களை கணித்துள்ளார். அதில் பல நிறைவேறியுள்ளது.
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் தொடர்பிலும், அதன் பின்னர் மன்னராக முடிசூடும் சார்லஸ் பதவி விலகுவார் என்றும் ஏற்கனவே நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதை குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் ஒருவர், தற்போது மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வயது காரணமாகவும் தமது மகனுக்கு ஆதரவாகவும் மன்னர் சார்லஸ் பதவி விலகும் முடிவுக்கு வரலாம் என்றும் அந்த நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மன்னர் சார்லஸுக்கு பின்னர், எவரும் எதிர்பாராத ஒருவர் மன்னராக முடிசூட்டப்படலாம் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளவரசர் ஹரி, மன்னர் 9வது ஹென்றி
மேலும், சார்லஸுக்கு பின்னர் பட்டத்து இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட்ட வாய்ப்பில்லையா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். வேல்ஸ் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட்ட முடியாமல் போனால்,
அடுத்த வரிசையில் இருக்கும் அவரது பிள்ளைகள் சார்பாக இளவரசர் ஹரி மன்னர் பொறுப்புக்கு வரலாம் என்றும், 38 வயதில் இளவரசர் ஹரி, மன்னர் 9வது ஹென்றி என முடிசூடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சார்லஸ் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தகவல் அறிந்ததும் இளவரசர் ஹரி லண்டன் புறப்பட்டுள்ளதில் மர்மம் இருப்பதாகவும் அந்த நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.