;
Athirady Tamil News

மாணவர்களுக்கு விசேட தொழில் கல்வி வேலைத்திட்டம்: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

0

கல்வியுடன் தொழில் கல்வி, திறன் விருத்தி, ஆராய்ச்சி உள்ளிட்ட விடயங்களை ஊக்குவிப்பதே எமது இலக்கு என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஜேர்மன் ரெக் நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தொழில் மற்றும் திறன் விருத்தி கல்வி
இப்பொழுது ஜேர்மன் ரெக் மூலம் இடம்பெறும் பயிற்சிகள் தரத்தில் உயர்ந்துள்ளது. இங்கு கல்வி கற்கும் நீங்கள் திறன்களை வளர்த்தவர்களாக வெளியேற வேண்டும்.

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

பல்கலைக்கழக கல்வி, தொழில்சார் கல்வி மட்டுமல்ல. திறன்விருத்தி உள்ளிட்ட ஆளுமைகளை அடைந்து புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இங்கு அதிக குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இங்கு மட்டுமல்ல கொழும்பிலும் குறைவுகள் காணப்படுகிறது. அவற்றை நிறைவு செய்ய உள்ளோம்.

தொழில்சார் கல்வி
நீங்கள் எமது முன்னே உள்ளவர்களைப் போல வளர்ந்து இவற்றை நிறைவு செய்யக்கூடியதாக வளர்ந்து முன்வர வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் நிறுவன ஊழியர்கள், ஜேர்மன் தூதரகத்தினருடன் பேசியுள்ளோம். எதிர்வரும் காலங்களில் உயரிய சான்றிதழ்களுடனான கல்வியை தொடர முடியும்.

அதனால் நல்ல தொழில் துறையை மேம்படுத்த முடியும் என்பதுடன், திறன்களையும் விருத்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.