;
Athirady Tamil News

இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்! புற்றுநோய் பாதிப்பு குறித்து பிரித்தானிய பிரபலம் வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

0

பிரித்தானியாவின் Got Talent நட்சத்திரம் ஆலன் ஃபின்னேகன் தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதால், இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பேன் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Britain’s Got Talent என்பது திறமையாளர்களை அடையாளம் காணும் நிகழ்ச்சி ஆகும். இதில் பிரபலமான நட்சத்திரமாக விளங்குபவர் ஆலன் ஃபின்னேகன் (Allen Finnegan).

இவர் கடந்த 2020யில் தனது Stand-up Act மூலம் அரையிறுதியை எட்டினார். இந்த நிலையில், ஆலன் ஃபின்னேகன் தனக்கு புற்றுநோய் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கண்டறிந்ததைத் தொடர்ந்து, அதனை குணப்படுத்த முடியாது என்பதை அறிந்தார். இதனால் 12 மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

56 வயதான ஆலன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கண்பார்வையில் பிரச்சனை இருப்பதைக் கவனித்தார். ஆனால், அதை பரிசோதித்தபோது இரு கண்களிலும் கட்டிகள் இருப்பதை ஆலன் அறிந்தார்.

மேலும் அவர் கண் மெலனோமா எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது ஒரு அரிய வகை புற்றுநோயாகும்.

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 850 பேர் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று Macmillan cancer Support தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆலன் Chemosaturation எனும் சிகிச்சை பெற்று தன் ஆயுட்காலத்தை நீட்டிக்க தற்போது நிதி திரட்டி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.