38 இலட்சம் ரூபா நிலுவை; இருளில் மூழ்கிய இரத்தினபுரி!
இரத்தினபுரி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட வீதிகளில் உள்ள மின் விளக்குகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வீதி மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் சிரமம்
இந்நிலையில் வீதிகளின் மின்குமிழ்கள் எரியாததால் பிரதுச மக்களும் வாகன சாரதிகளும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பாடசாலைகள் , வணிக நிறுவனங்கள் , வீடுகளில் ஒளிர விடப்படுகின்ற மின் விளக்குகள் மூலமே குறித்த வீதிக்கு வெளிச்சம் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கு வருமானம் வரி மூலமே வருமானம் கிடைக்கிறது எனவும் ஆனால் தற்போது உள்ளூராட்சி அமைப்புகளால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , மின் துண்டிப்பு குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாக உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார் .