;
Athirady Tamil News

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “சூப்பர் எர்த்” : உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு

0

பூமியை போலவே உயிரினங்கள் உயிர் வாழக் கூடிய மற்றொரு கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கிரகத்திற்கு “சூப்பர் எர்த்” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளதோடு, அது சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்ட இந்த கிரகம் சுற்று வட்டப் பாதையில் தன் தாய் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

ஒரு ஆண்டு
அதேவேளை, பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்த கிரகம் வெறும் 19 நாட்களிலேயே தனது முழு சுற்றுவட்டப் பாதையை சுற்றி வந்துவிடுகிறதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது வெறும் 19 நாட்களே மட்டுமே ஆகும்.

நாசாவின் பதிவு
அத்துடன், சூப்பர் எர்த்தின் மேற்பரப்பில் திரவ நீருக்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதோடு, திரவ நீர் இருப்பது உயிரினங்கள் வாழ உகந்த ஒன்றாக காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது குறித்து நாசா வெளியிட்டுள்ள பதிவில், “சூப்பர் எர்த் ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும் அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.