வவுனியா துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங் கோரல்!
வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபத்துக்குமைவாக பல்கலைக்கழகப் பேரவையின் பதவி வழிச் செயலரான பதிவாளரால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் மற்றும் மேலதிக விபரங்களை https://vau.ac.lk/calling-applications-for-the-post-of-vice-chancellor/ என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.
ஆர்வமுடையவர்கள் தமது விண்ணப்பங்களை இம் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணிக்கு முன்னராகப் பல்கலைக்கழகப் பதிவாளருக்குக் கிடைக்கக் கூடியவாறு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் மென்பிரதி பதிவாளரது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.