தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழில் 106 பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு “உறுதி உறுதிப் பத்திரம் வழங்கல்” நிகழ்வு இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது மேலதிகமாக 20 பயனாளிகளுக்கு வீடமைப்பு கடனுக்கான முதற்கட்ட காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, உப தலைவர் லக்ஷ்மன் குணவர்தன, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.