தெமட்டகொடை ருவனின் குடும்பத்தினர் விடுவிப்பு
ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொடை ருவனின் மனைவி , மகன் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (8) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாக கூறப்படும் 168 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வெளிநாடு செல்ல தடை
இந்நிலையில் சந்தேக நபர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் இரு சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் , ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பில் அவர்கள் கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.