நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை
நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கு
குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
பாண் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின், கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
தொடர் சோதனை
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு தெரிவிக்க முடியும் என கோரப்பட்டுள்ளது.