ஹவுதி கிளா்ச்சியாளர்களுக்கு பேரிடி: அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல்
ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது.
தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ராணுவம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹவுதி கிளா்ச்சியாளா்களின் 4 ஆளில்லா படகுகள், கப்பல் அழிப்பு ஏவுகணைகளைத் தாங்கிய 7வாகனங்களை தங்களது படையினா் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவுதிக்கள் தாக்குதல்
காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், அவா்கள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
காசாவுக்கு ஆதரவாக செங்கடலில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிக் குழு தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.