;
Athirady Tamil News

நீர்வேலியில் புதிதாக அமைக்கப்பட்ட உபதபாலகம் திறந்துவைப்பு..!!!

0

நீர்வேலியில் உப தபாலகத்திற்கு புதிய நிரந்தரக் கட்டம் அமைப்பட்டு இன்றைய தினம் (10.02.2024) காலை 9 மணிக்கு வைபவ ரீதியாக நிகழ்வுகள் ஆரம்பமாகி பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வட மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் திருமதி மதுவதி வசந்தகுமார் அவர்களால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்தக் கட்டடமானது யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் கோவில் வீதிக்கு அருகாமையில் உள்ள காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உபதபாலகம் அமைப்பதற்கான காணியினை நீர்வேலி மத்தியைச் சேர்ந்த திருதிருமதி கந்தசாமி கிருபாகரன் அவர்கள் தனது சொந்தக் காணியை தந்துதவியுள்ளதுடன் அவரது நிதிப்பங்களிப்புடன் உப தபாலகம் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த உப அலுவலகக் கட்டடத்துடன் ஆறுமுக நாவலர் சிலை, சிவசங்கர பண்டிதர் சிலை, அரசகேசரி மன்னன் ஆகியோரின் சிலைகளும் அமைக்கப்பட்டு தமிழ் முற்றம் என்ற பெயருடன் சிலைகளும் திறந்துவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது இ.குணநாதன் (ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திருமதி மதுமதி வசந்தகுமார் (பிரதி அஞ்சல்மா அதிபர் வடக்கு மாகாணம், வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ சிறப்பு விருந்தினர்களாக தி.நிரோஷ் இயக்குநர் வடக்கு மனித உரிமைகள் நிலையம், இ. பகீரதன் – செயலாளர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, கு. செந்தில்குமார் பிரதம அஞ்சல் அத்தியட்சகர் – யாழ்ப்பாணம் ந.மோகன்ராஜ் தபாலதிபர்- கோப்பாய் , திருமதி வனஜா செல்வரத்தினம் பணி்பாளர்- தொழில்துறை திணைக்களம் – வடக்கு மாகாணம், திருமதி ஸ்ரீரதி முருகசோதி நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி அதிபர் ) நீர்வேலி ஆலய குருக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உபதபாலக கட்டடத்தின் பெயர் பலகையை கோப்பாய் தபாலதிபதி ந.மோகன்ராஜ் அவர்களும் திறந்து வைத்ததுடன் கட்டத்தின் நினைவுக் கல்லினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை செயலாளர் இ. பகீரதன் அவர்கள் திறந்து வைத்ததுடன் உபதபாலகக் கட்டடத்தினை அமைத்து தந்த திருதிருமதி கந்தசாமி கிருபாகரன் அவர்களுக்கு விழா ஏற்பாட்டுக் குழுவினர் நினைவுப்பரிசினையும் வழங்கி வைத்ததுடன் உபதபாலகத்தினை உபதபாலதிபருக்கு உத்தியோகபூர்வமாக கிருபாகரன் தேன்மொழி அவர்கள் கையளித்தார்.

கடந்த காலங்களில் நீர்வேலி உபதபாலகம் நிரந்தர கட்டடம் இன்றி காலத்துக்கு காலம் இடம்மாறியது. இவ்வாறான நிலையிலேயே நீர்வேலி மத்தியைச் சேர்ந்த கந்தசாமி கிருபாகரன் அவர்கள் தமக்கு சொந்தமான காணியையும் கட்டுமானத்திற்கு நிதியையும் தந்துதவியுள்ளார்.

இந்த காணியின் முகப்பு பகுதி வலி.கிழக்கு பிரதேச சபையின் ஆளுகையில் இருப்பதால் அந்தப் பகுதியை தபாலக கட்டடத்தின் நுழைவு பகுதியை அமைப்பதற்கு பிரதேச சபையால் தரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.