தலைக்கவசத்தினுள் ஐஸ் போதைப்பொருள்!
மன்னாரில் தலைக்கவசத்தினுள் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை (09) மாலை கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார், சாவட்காடு புனித அந்தோனியார் ஆலயப் பகுதியில், தலைக்கவசம் அணிந்திருந்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பரிசோதித்தபோது தலைக்கவசத்துக்குள் ஐஸ் போதைப்பொருள் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.