கண்காணிப்பு இன்றி செலவு செய்யப்படும் தொண்டு நிறுவனங்களின் நிதி
பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பெறப்படும் நிதியில் பாதிக்கு மேல் எந்தவிதமான கண்காணிப்பும் இல்லாமல் செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து, தேசிய தன்னார்வ தொண்டு நிறுவன செயலகத்தில் இதுபோன்ற அனைத்து அமைப்புகளையும் கட்டாயப் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான இறுதி நிலைபாட்டுக்கு அரசாங்கம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) யோசனை என்ற தலைப்பில் புதிய சட்டத்தின் இறுதி வரைவு இப்போது தயாராகி வருகிறது.
அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படுவதற்கு முன்னர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்களின் கருத்துக்களுக்காக இது இப்போது விநியோகிக்கப்பட்டுள்ளது.
33 பில்லியன் வெளிநாட்டு நிதி
இந்த கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கருத்துக்கள் இருந்தால், சட்டத்திற்கு முன், அது யோசனையில் சேர்க்கப்படும் இந்தநிலையில் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதும், அரச சார்பற்ற நிறுவனங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வழிவகை செய்யப்படும் என , தேசிய தன்னார்வ தொண்டு நிறுவன செயலக பணிப்பாளர்; விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் தங்கள் திட்டங்களுக்காக 33 பில்லியன் வெளிநாட்டு நிதியைப் பெற்றன.
இருப்பினும், நாட்டில் பதிவு செய்யப்படாத பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மொத்தத்தில், ஆண்டுக்கு 100 பில்லியன் ரூபாய் நிதி பெறப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அரசின் எந்த ஒரு கண்காணிப்பும் இன்றி அதிக அளவு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி செலவிடப்படுகிறது என்று விமலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தற்போது, தேசிய அளவில் 1,786 பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மாவட்ட அளவில் 1,636 மற்றும் பிரதேச அளவில் 38,524 தன்னார்வ நிறுவனங்களும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.