கனடாவில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு
பருவகால மாற்றத்திற்கு அமைய கனடாவில் விரைவில் நேரத்தில் மாற்றம் ஏற்படவள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி இந்த நேர மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்படி மக்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பகல்நேரத்தை சேமிக்கும் நோக்கில்
பகல்நேரத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எனினும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் சாதனங்களில் தானியங்கி அடிப்படையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஆண்டு தோறும் இவ்வாறு நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.