இலங்கை பெட்ரோலியத்துறையில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட செல் ராம் பாரக்ஸ்(Shell-RAM Parks Company) நிறுவனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் கோப்ரேசன் (Ceylon Petroleum Storage Terminal Company) ஆகிய நிறுவனங்கள் பெட்ரோலியத்தை சேமிப்பதற்கும் விநியோகிப்பதற்குமான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் இன்று (12.02.2024) கொலன்னாவையில் உள்ள இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
காஞ்சன விஜேசேகரவின் பணிப்புரை
இதன்படி, நாட்டில் செல் ராம் பாரக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை சேமித்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய கம்பனிக்கு வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி முன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், எரிபொருள் விநியோகப் பணிகளை விரைவாக ஆரம்பிக்க மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பணிப்புரையின் பேரில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.