நாட்டுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு யுவதியின் செயலால் கண்ணீர் விட்ட முதியவர்!
இலங்கைக்கு சுற்றுலாவந்த வெளிநாட்டு யுவதி ஒருவர் தான் பயணித்த முச்சக்கரவண்டி சாரதியான வயதான நபருக்கு பெரும் தொகை பணம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஓட்டோ பயணத்திற்கான பணத்துடன் மேலதிகமாக 5000 ரூபாவை கொடுத்துள்ளார். தன்னிடம் மேலதிக பணம் இல்லையென தெரிவித்த அந்தப் பெண், 100 டொலரை கொடுத்துள்ளார். அதன் பெறுமதி தற்போது 32 ஆயிரத்திற்கும் மேல் ஆகும்.
நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட முதியவர்
அதோடு அவரை பார்த்து, நீங்கள் என் தந்தையைபோல் உள்ளீர்கள், நான் அவசரமாக வந்ததனால் வேறு பணம் கையில் இல்லை என கூறி 100 டொலரை முதியவரின் கையில் யுவதி கொடுத்துள்ளார்.
யுவதியின் செயலால் நெகிழ்ச்சியடைந்த முடிதியவர் கண்ணோர் விட்டபோது அவரை அணைத்து ஆறுதல் கூறிய யுவதி, நீங்கள் என தந்தையை போன்றவர் என கூறியுள்ளார். அதோடு முதியவரை அனுப்பிவிட்டு கண்களில் கண்ணீருடன் யுவதி சென்றமை பலரையும் நெகிழவைத்தது.
காணொளியை காண..https://fb.watch/q9KNO921gr/.
நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இளம் பராயத்தினர் சொகுடு வாழ்க்கைக்கும், போதைக்கும் அடிமையான நிலையிலும் சுற்றித்திரியும் நிலையில் முதியவர் இந்த வயதிலும் முச்சக்கரவண்டியோட்டி உழைப்பில் ஈடுபட்டு வருகின்றமை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.