காவல் நிலையத்தில் சந்தேக நபர்களுக்கு விஷப்பால்! 7 பேர் கைது
ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதன்போது இரு பெண்கள் உட்பட 7 பேர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கம்பளை – கலஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவர் ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கே இவ்வாறு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகயீனமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது ஆட்டுப்பட்டிதெரு காவல் நிலையத்தில் கடமையில் இருந்த பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.