கனடாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கனேடிய புள்ளிவிபரவியல் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கனடாவில் பணிபுரியும் இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி முப்பது வீதமான ஆண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.
ஆண்,பெண் துன்புறுத்தல்
அதேபோன்று ஐம்பது வீதமான பெண்களும் அதேவகையிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரினால் பெண் பணியாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே
25 முதல் 34 வயது வரையிலான பணியாளர்களே அதிகளவில் இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிடங்களில் ஒடுக்குமுறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.