அதிகரிக்கும் எச்.ஐ.வி எய்ட்ஸ் : பாரிய சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிப்பு!
தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருவதாக தேசிய எய்ட்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எய்ட்ஸை நோயால் பாதிக்கப்படுவதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எச்.ஐ.வி எய்ட்ஸ்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ ஆயிரத்து 400 பேர் புதிதாக எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதன்படி, ஒரு நாளைக்கு குறித்த நோயுடன் சுமார் 4 பேர் இணங்கானப்படுகிறார்கள்.
மேலும் எச்.ஐ.வி.யால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 42 வீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அச்சுறுத்தல்
இதனை தொடர்ந்து, கம்போடியாவில் பாரிய சுகாதார அச்சுறுத்தலாக காணப்படும் எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமென அந்த நாட்டின் சிரேஷ்ட அமைச்சரும், தேசிய எய்ட்ஸ் ஆணையத்தின் தலைவருமான இங் மவுலி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும், 2025 ஆம் ஆண்டுக்குள் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.