;
Athirady Tamil News

பாபா வங்காவின் கணிப்பா இஸ்ரேல்-ஹமாஸ் போர்…!

0

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கு ஒத்த பாபா வங்காவின் கணிப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

2024 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புக்களுக்கமைய இந்த போர் தீவிரமடைந்துள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா கடந்த 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார்.

சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்த அவருக்கு, எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டில் உலகில் நடக்கப்போகும் 7 விடயங்களை பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்
உலகில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கும் என அவரது கணிப்பில் குறிப்பிடப்ட்டுள்ளது.

குறிப்பாக மிகப்பெரிய நாடுகளில் உயிரியியல் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கமைய, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையிலான போர் தீவிரமைடைந்திருக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது.

புடின் கொலை
அத்துடன், உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான பாபா வங்காவின் இரண்டாவது கணிப்பு அமைந்துள்ளது.

இதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, அந்த நாட்டு குடிமகன் ஒருவர் படுகொலை செய்வார் என பாபா வங்கா கணித்துள்ளார்.

இந்த கணிப்பு ரஷ்ய மக்கள் மாத்திரமின்றி உலக மக்கள் அனைவரையும் திகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், பாபா வங்காவின் கணிப்புப்படி, புடின் இந்த ஆண்டில் கொலை செய்யப்படுவரா என்ற அச்சமும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

கணிப்புக்கள்
இதேவேளை, 2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்களால் வரலாற்றைப் புரட்டும் ஆண்டாக இருக்கும் எனவும், வானிலை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்கும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால், நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுமெனவும், ஏராளமான இணையவழி மோசடிகள் அல்லது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, நாடுகளின் பாதுகாப்பு நிலைகுலையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

புற்றுநோய் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதிக்கு 2024 ஆம் ஆண்டு மருந்து கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.