கசிப்பு குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி!
பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கசிப்பு அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த மாணவனுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக மாணவன் ஒருவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று (14) 2பாடசாலையில் மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்தார்.
மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு
இதுகுறித்து ஆசிரியர்கள் அவரிடம் கேட்டபோது, பாடசாலைக்கு அருகே உள்ள பிரதான வீதியில் வைத்து தான் கசிப்பு அருந்தியதாக கூறினார். இதனையடுத்து மாணவன் உடனடியாக பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தான் கசிப்பு அருந்தியதாக மாணவன் வைத்தியசாலையில் கூறியதன் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பசறை ஆதார வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.