வன்னிப் பாடசாலையொன்றில் வெட்டப்பட்ட மாணவனின் கை.நடந்தது என்ன?
வன்னியில் பாடசாலை ஒன்றில் கல்விபயஜலும் மாணவன் தன் கையில் தானே வெட்டிக் கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பாடசாலை மாணவனின் இந்த செயற்பாடு தொடர்பில் குறித்த பாடசாலையில், ஆசிரியர்கள் அக்கறையின்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாணவனின் மனதில் ஏற்பட்ட அழுத்தம் ஒன்றின் காரணமாகவே அவன் தன் கையில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் அந்த காரணம் தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை.
மாணவரிடையே உள்ள உளவளச் சிதைவு
இதன்படி வன்னியில் உள்ள பல பாடசாலைகளிலும் மாணவர்கள் தங்கள் கையில் இப்படி காயங்களை ஏற்படுத்திக்கொள்வதனையும் ஏற்படுத்திய காயங்கள் தழும்புகளாக கைகளில் இருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
மாணவர்களிடையே ஏற்பட்டுவரும் மனநிலைக் குழப்பங்களே இத்தகைய பிரச்சினைகள் தோற்றம் பெறக் காரணமாகின்றது.
கல்வியில் பின்னடைவைச் சந்தித்துள்ள வன்னிப் பாடசாலைகளில் மாணவர்களிடத்தில், மனநிலைக் குழப்பத்திற்கும் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கும் இடையிலான தொடர்பினை உரிய தரப்பினர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என சமூக ஆர்வளர்களால் கூறப்படுகிறது.