பொருளாதார வீழ்ச்சியால் நான்காவது நிலையை எட்டிய ஜப்பான்
ஜப்பானின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிய அமைச்சரவை நேற்று ( 15.02.2024) வெளியிட்ட அலுவலகத் தரவுகளின் அடிப்படையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2023 இன் கடைசி காலாண்டில் இருந்தே பொருளாதாரம் மந்த நிலையை எட்டியுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வருடாந்த விகிதத்தில் 0.4% பொருளாதாரம் குறைவடைந்ததென அரசாங்கம் அறிவித்தது, இருப்பினும் 2023ஆம் ஆண்டு முழுவதிலும் 1.9% அளவு வளர்ச்சியடைந்துள்ளது.
நாணய பெறுமதியின் வீழ்ச்சி
இந்நிலையில், ஜூலை தொடக்கம் செப்டெம்பருக்குள் 2.9% குறைவடைந்து பொருளாதாரம் தொழில்நுட்ப மந்த நிலையில் இருப்பதற்கு நேரான இரண்டு காலாண்டுகள் சுருக்கம் ஒரு குறிகாட்டியாகக் கருதப்படுகிறது.
மேலும், ஜப்பானின் மொத்த பெயரளவு உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு $4.2 டிரில்லியன் ஆகவும், அதே சமயம் ஜெர்மனியின் மதிப்பு $4.4 டிரில்லியன் அல்லது $4.5 டிரில்லியன் ஆகவும் நாணய மாற்று வீதத்தை பொறுத்து காணப்பட்டது.
அதேநேரம் ஜப்பானின் குறித்த பொருளாதார பின்தங்கிய நிலைக்கு ஜப்பானிய நாணயத்தின் (யென்) பெறுமதி குறைவடைந்ததும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக கருதப்படுகின்றது.
நான்காவது இடம்
ஏனெனில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒப்பீடுகள் டொலர் மதிப்பில் உள்ளன.
ஆனால் ஜப்பானின் ஒப்பீட்டளவிலான பலவீனம் அதன் மக்கள்தொகை மற்றும் பின்தங்கிய உற்பத்தித்திறன் மற்றும் போட்டித்தன்மையின் வீழ்ச்சியையும் பிரதிபலிக்கிறது என்று பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பொருளாதாரமானது, உலகலாவிய ரீதியில் இரண்டாவது இடத்தில் காணப்பட்ட போதும் சீனாவால் பின்தள்ளப்பட்டது. தற்போது ஜெர்மனியால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.