;
Athirady Tamil News

இந்திய மாணவர்களை இழக்கும் பிரித்தானியா: சுனக்கின் திட்டத்தின் எதிரொலி

0

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடா மற்றும் இந்தியாவுக்கான உறவில் விரிசல் கண்டதை அடுத்து, இந்திய மாணவர்கள் பெருமளவில் கனேடிய பல்கலைக்கழகங்களை தெரிவு செய்வதை தவிர்த்த நிலையில், தற்போது ரிஷி சுனக் அரசாங்கத்தின் புதிய மாணவர் விசா விதிகளால், பிரித்தானியாவும் இந்திய மாணவர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உயர்கல்விக்குப் பிந்தைய பணி விசாவிற்கென முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்கள் தங்களை சார்ந்திருப்பவர்களை அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

4 சதவிகித வீழ்ச்சி

இதன்படி வெளியான தரவுகளின் அடிப்படையில், 4 சதவிகித வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 சதவீதம் சரிவடைந்து 8,770 என ஆய்வுகளில் கூறப்படுகிறது.

எனினும், பிரித்தானியாவின் உயர்கல்வி முறை உலகளவில் கவனம் பெற்றுள்ளது என்றும் சர்வதேச விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 0.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சீனாவில் இருந்து 3 சதவீதம் அதிகரித்து, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 910 என பதிவாகியுள்ளது எனவும், துருக்கியில் இருந்து 37 சதவீதம் அதிகரித்து, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 710 என பதிவாகியுள்ளது எனவும் கனடாவில் இருந்து 14 சதவீதம் அதிகரித்து, விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 340 என பதிவாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.