காசா எல்லை சுவர்களை உயர்த்தும் எகிப்து: வெளியானது புகைப்படங்கள்
ராபாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தவுள்ள நிலையில் எகிப்து நாடு, காசாவின் எல்லையையொட்டிய தனது பிராந்திய பகுதிகளில் சுவர் எழுப்பி வருகிறதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, எல்லை பகுதியையொட்டிய நிலத்தை உயர்த்தும் பணிகளிலும் எகிப்து ஈடுபட்டுள்ளதைச் செயற்கைகோள் வழியாக பெறப்படும் படங்களில் இருந்து அசோசியேடட் பிரஸ் உறுதி செய்துள்ளது.
உடன்படிக்கை
சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ராபாவில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான மக்கள், இஸ்ரேல் போரை விரிவுப்படுத்தினால் எகிப்து எல்லைக்குள் நுழையும் அபாயம் நிலவுகிறது.
1979 ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையை மீறும் செயல் என இது குறித்து இஸ்ரேலை எகிப்து பல முறை எச்சரித்துள்ளது.
செயற்கை கோள் படங்கள்
அதன்படி, தற்போது காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜுவைத்- ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிமீ தொலைவுக்குச் சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகிற செயற்கை கோள் படங்களை வெளியாகியுள்ளன.
20 சதுர கிமீ அளவுக்கு சுவரால் தடுக்கப்பட்ட பகுதியை எகிப்து உருவாக்குவதாகவும் அதில் 1 லட்சம் பேர் அளவுக்கு தஞ்சம் அடையலாம் என எகிப்து அதிகாரி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.