எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு புடினே பொறுப்பு: ஜோ பைடன்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு அந்நாட்டு அதிபர் புடின் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷ்ய அதிபர் புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தமையால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது.
அதனை தொடர்ந்து, கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை
அத்துடன், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆகையால் அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் அவர் சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்நிலையில், அவர் திடீர் என நேற்று சிறையில் உயிரிழந்தார்.
புடினே பொறுப்பு
உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள அதிபர் புடினுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு அந்நாட்டு அதிபர் புடின் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தெரிவித்துள்ளார்.