யாழ். இணுவில் ரயில் கடவை : அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நிரந்தர ரயில் கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை அங்கு ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
அண்மையில் இணுவில் பகுதியில் ரயிலுடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தந்தை மற்றும் சிறு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திருந்தது.
இந்த நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (16-02-2024) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்கபாடாக கிராமத்து இளைஞர் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மேலும், அதற்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.