முட்டுக்கட்டையாக இளவரசர் வில்லியம்… ஹரி அரண்மனை திரும்ப வாய்ப்பே இல்லை: வெளிவரும் புதிய தகவல்
அரச குடும்பத்திற்கு திரும்பும் இளவரசர் ஹரியின் எண்ணம் இனி ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
முயற்சிகளையும் முறியடிக்க
சார்லஸ் மன்னரின் நோயை காரணமாக குறிப்பிட்டு அரண்மனைக்கு திரும்பும் ஹரியின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க இருப்பதாக இளவரசர் வில்லியம் தமது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
தேவை ஏற்பட்டால், மேலதிக பொறுப்புகளை ஏற்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் வில்லியம் அறிவித்துள்ளார். 2020ல் அரண்மனை பொறுப்புகளில் இருந்து விலகிச் சென்ற இளவரசர் ஹரி,
தற்போது தந்தையின் நிலை அறிந்து மீண்டும் அரண்மனைக்கு திரும்பவும், பொறுப்புகளை ஏற்கவும் தயாராக இருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையிலேயே வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது நண்பர்களிடம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மேகனை நம்ப தயாராக இல்லை
கடந்த வாரம் லண்டன் திரும்பிய இளவரசர் ஹரி, சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட சந்திப்பை முன்னெடுத்ததுடன், மகிழ்ச்சியுடன் அமெரிக்கா திரும்பியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், ஹரி மீண்டும் அரண்மனைக்கு திரும்புவதை வில்லியம் ஏற்க வாய்ப்பில்லை என்றும், அவர் ஒருபோதும் அதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது ரத்த பந்தமான சகோதரரை நம்பினாலும், இனிமேலும் அவர் மேகனை நம்ப தயாராக இல்லை என்றே தகவல் கசிந்துள்ளது. எந்த கட்டாயத்தின் பேரிலும், ஹரி அரண்மனைக்கு திரும்புவதை வில்லியம் அனுமதிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.