நாசாவுடன் இணைந்து அடுத்த ஆய்வுத் திட்டம்: இஸ்ரோ தலைவா் சோமநாத் அறிவிப்பு
இந்தியாவின் அடுத்த விண்வெளி ஆய்வுத் திட்டத்தை (நிசாா்) நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா். இன்சாட் -3டிஎஸ் வெற்றிக்குப் பிறகு அவா் கூறியதாவது: ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட் 3-டிஎஸ் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு. அந்த செயற்கைக்கோளின் சூரிய ஆற்றல் கட்டமைப்பு (சோலாா் பேனல்) சரியான முறையில் இயங்கி வருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவதற்கு இந்த வெற்றி புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசாா் எனப்படும் புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டத்தை அடுத்ததாக செயல்படுத்தவுள்ளன என்றாா் அவா்.