அமைச்சர் ஹரினுக்கு எதிராக வழக்கு தாக்கல்
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் வசந்த பண்டார இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ஹரீனுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து சட்ட ஆலோசனை பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹரீன் பெர்னாண்டோவின் கருத்து
இலங்கை இந்தியாவின் ஒர் பகுதியே என அண்மையில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கூற்று தொடர்பிலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மை
அமைச்சரின் கருத்து அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற போது செய்து கொள்ளப்பட்ட சத்தியப் பிரமாணம் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.