;
Athirady Tamil News

யாழில். போதைப்பொருள் தொடர்பில் இரு மாதங்களில் 250 வழக்குகள் தாக்கல்

0

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு மாத கால பகுதியில் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் , போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை , கடத்தி சென்றமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.