மன்னார் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு
கடந்த 9 வருடங்களில் 340ற்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தகவல் வழங்கியுள்ளது.
மன்னார், தலைமன்னார் பகுதியில் நேற்று முன்தினம் (16.02.2024) 10 வயது சிறுமி தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
வன்முறை சம்பவங்கள்
இந்த நிலையில் கடந்த 2019 – 2023 ஐந்து வருடங்களில் மாத்திரம் மன்னார் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் தொடர்பில் 120 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக 2022 ஆண்டு மாத்திரம் 38 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தகவல் வழங்கியுள்ளது.
இதேவேளை 2019 – 2023 ஆகிய 5 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 27 தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அதிலும் குறிப்பாக 2021 ஆண்டு 11 தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 9 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான 113 வன்முறை சம்மந்தமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ,113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.